தலவிசேடம் தேவிக்கு உணர்த்திய படலம்
தலவிசேடம்- கோவில் சிறப்பு
கைலாயத்தில்
சிவபெருமான் உமாதேவியாரோடு வீற்றிருக்கும் பொழுது ஒரு சமயம், தேவியார் சிவபெருமானை
நோக்கி,
“இக்கைலாயத்திலும்
சிறந்ததாக விரும்பி ஆற்றூரில் வீற்றிருப்பதற்கு காரணம் யாது?” என்று வினாவினார்,
அதற்கு
சிவபெருமான்,
“கண்ணாலும் பாகும் தேனும் பணியும்
கற்கண்டும் பாலும் இன்னமிழ்தமும் உட்கை தமிழனை இனிக்கும் சொல்லாய்! கேள்”.
முன்
காலத்தில் நாவிலந்தீவிலுள்ளவர்கள் பல பாவங்களை புரிந்தமையால் வருந்திய பூமாதேவி
நம்மிடம் வந்து குறை உரைத்ததால்.
அவளுடைய
வேண்டுகோளுக்கு இணங்கி நாவலந்தீவில் நாம் பல மூர்த்தி, தளம், தீர்த்தங்களாக
விளங்கி அவற்றை வழிபடுபவர் இன்பம் வழங்கி வருகின்றோம், அங்கனம் நாம் அமர்ந்த
தளங்கள் பலவற்றிலும் மிகவும் சிறப்பானது ஆற்றூர் ஆகும்.
அங்கே
நாம் என்றும் பிரியாமல் வாழ்வோம். இக்கயிலாய கங்கையே ஆற்றூரில் நமது சன்னதியில்
ஒரு புட்கரணிவடிவில் அமைந்திருத்தலால் அதனையும் கயிலாய கங்கை என்றே வழங்குவர்; அது
சிவதீர்த்தம் என்றும் கூறப்படும்.
தென்பாலில்
பழவாறும் வடபாலில் மண்ணியாரும் ஓடுகின்றன. இம்மூன்றும் நமது மூன்று கண்கள் போன்றவை
அதனால் அத்தலமும் அங்குள்ள மந்தார நிழலும் எல்லாவற்றிலும் சிறந்தது தான்.
Om Namasivaya 🙏
ReplyDelete